” சுஷ்மா அனைத்தையும் செய்து முடிப்பவர் “ – தனது மகனை மீட்டதற்கு நன்றி தெரிவித்த அன்சாரி தாய்

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பிய ஹமீத் நிகல் அன்சாரி தனது குடும்பத்தினருடன் வெளியுற்வுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து நன்றி தெரிவித்தனர்ர். அப்போது ஹமீத் நிகல் அன்சாரியின் தாய் ’ மேடம் (சுஷ்மா) அனைத்தையும் செய்து முடிப்பவர் ‘ என தெரிவித்தார்.

hamid

சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்ட தனது தோழியை சந்திப்பதற்காக 2012ம் ஆண்டு பாகிஸ்தானிற்கு சென்ற மென்பொறியாளர் ஹமீத் நிகல் அன்சாரி, சட்டவிரோதமாக அந்நாட்டிற்குள் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டார். விராணைக்கு பிறகு ஹமீத் நிகல் அன்சாரிக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது தனது தண்டனை முடிவடைந்த நிலையில் நேற்று முன் தினம் ஹமீத் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், ஹமீத் பாதுகாப்பாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.

இந்தியா வந்த ஹமீத் அன்சாரியை, ஒரு தாய்ப்போல் கட்டித்தழுவிய சுஷ்மா இந்தியாவிற்கு வரவேற்றார். அப்போது பேசிய ஹமீத் “ என்னை மன்னித்துவிடுங்கள்…நன்றி அம்மா “ என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, பாகிஸ்தானில் தான் இருந்தது குறித்து சுஷ்மா சுவராஜிடம் ஹமீத் கூறியபோது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அந்த தருணத்தில் ஹமீதிற்கு சமாதானம் சொன்ன சுஷ்மா, “ உங்களிடம் நிறைய துணிவு உள்ளது. நீங்கள் மன்னிப்புக் கேட்க கூடாது “ என குறிப்பிட்டார். அதன்பிறகு அன்சாரி தாயராரும் சுஷ்மாவிற்கு நன்றி தெரிவித்தார். அப்போது, ”மேடம் (சுஷ்மா) அனைத்தையும் செய்து முடிப்பவர் “ எனக் கூறினார்.

அன்சாரி விவகாரத்தில் சு‌ஷ்மா சுவராஜ் தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் கவனம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.