மதராசபட்டினம்’ கதை அல்ல.. நிஜம்.’’

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளைக்கார பெண்ணுக்கும், சென்னை இளைஞனுக்கும் இடையே உருவான காதலை சொல்லி இருந்த வரலாற்று திரைப்படம் ‘மதராசபட்டினம்’.
ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக அறிமுகம் ஆனார். (பின்னர் ஐ, எந்திரன் -2 படங்களில் நடித்தார்)
‘மதராசபட்டினம்’ வெளியாகி இன்று 10 ஆண்டுகள் ஆகிறது.
படம் உருவான விதம் குறித்து சொல்கிறார், இயக்குநர் விஜய்.
‘’ நான் கல்லூரியில் படித்தபோது எனது ஆங்கில பேராசிரியர் சொன்ன கதையில் இருந்து உருவாக்கிய திரைக்கதைதான் ‘மதராசபட்டினம்’.
இந்திய அரசியல்வாதி ஒருவருக்கும், பிரிட்டிஷ் பெண்ணுக்கும் இடையே மலர்ந்த உண்மை காதல் தான், பேராசிரியர் சொன்ன ’ஒன் லைன்’ கதை. அந்த காதல் நிறைவேறவில்லை. அந்த ’ஒன்லைன்’ கதை எனது அடிமனதில் தேங்கி இருந்தது. அதைத்தான் பின்னர் படமாக்கினேன்.
இந்த படத்தில் நடிப்பதற்காகவே பிறந்தவர், எமி ஜாக்சன் என்றே சொல்ல வேண்டும்.
இணையதளத்தில் அவர் புகைப்படத்தை முதன்முறையாக பார்த்தேன். விசாரித்தேன். கதாநாயகியாக்கினேன்.
படத்தில் நீங்கள் பார்த்த மவுண்ட்ரோடு (அண்ணாசாலை) காட்சிகளை தாம்பரத்தில் அரங்கம் அமைத்து எடுத்தோம்.சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை வடபழனி மோகன் ஸ்டூடியோவில் ‘செட்’போட்டு படமாக்கினோம்.’ என்கிறார், இயக்குநர் விஜய்.
-பா.பாரதி.