முழுசா நம்பி நாராயணனாக மாறிய சாக்லேட் பாய் மாதவன்…!

அலைப்பாயுதே படத்தில் மூலமாக அறிமுகமாகிய சாக்லேட் பாய் மாதவன் தொடர்ந்து புதிய புதிய வேடங்களைத் தேர்வு செய்து நடிக்கும் அவர் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்

இந்நிலையில் அடுத்து இஸ்ரோ விஞ்ஞானி பற்றிய ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இதற்காக நம்பி நாராயணன் போலவே தனது தோற்றத்தை மாற்றி நடித்துள்ளார். தலைமுடி, தாடி என தொப்பையையும் வளர்த்திருக்கிறார். அடுத்த 12 நாட்களில் எந்த டயட் முறையையும் பின்பற்றாமல் பழைய தோற்றத்துக்கும் மாறியுள்ளார். .

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நம்பி நாராயணன் போன்ற தோற்றத்தைப் பெறுவதற்காக 2 நாட்கள் ஒரே நாற்காலியில் 14 மணி நேரம் அமர்ந்திருந்தேன் என்று கூறியுள்ளார்.