பாக்தாத்:

ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.

44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கையில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 2-வதாக 47 இடங்களில் வெற்றி பெற்றது.

பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி 42 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. மதகுரு மக்தாதா சதார் தேர்தலில் போட்டியிடவில்லை. ஷியா பிரிவு தீவிரவாத இயக்க தலைவராக இருந்ததால் அவர் பிரதமர் ஆக முடியாது. எனினும் பிரதமரை தேர்வு செய்வதில் மதகுரு முக்கிய பங்காற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.