நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் படம் மாறா. இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொரோனா பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே முடிவடைந்து விட்டது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மிக விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை இசைக் கோர்ப்பு பணிகள் துவங்க உள்ளன. தற்போதைய நோய் பரவல் தீவிரமான இந்த சூழ்நிலை யில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகள் அனைத்தும் கண்டிப்பாக மிகச் சிறந்த முறையில் கடைபிடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடை பெறும் படக்குழுவினரின் பாதுகாப்பு எங்களது முதன்மை குறிக்கோள்.


இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத் திற்கு இசையமைக்கிறார். கவிஞர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார் . பிரபல பல விளம்பரப் படங்கள் மற்றும் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற ’கல்கி’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் திலீப்குமார் இப்படத்தை இயக்குகிறார். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் மிகப்பெரிய தமிழ் சினிமா ஆளுமைகள் இப்படத்தின் நடிப்பு மற்றும் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றி உள்ளனர். அவர்களை பற்றி விவரங்கள் மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.