கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடித்து 2000 ஆம் ஆண்டு வெளியானவெற்றி படம் ‘மின்னலே’.

இந்தியில் ‘ரெஹ்னா ஹே தேரே தில் மெய்ன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் கௌதம் மேனனே இயக்கியிருந்தார். இதில் மாதவன், தியா மிர்சா, சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இதற்கு மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில்

‘ ‘ரெஹ்னா ஹே தேரே தில் மெய்ன்’ இரண்டாம் பாகம் குறித்த வதந்திகளைப் படிக்க நேர்ந்தது. அது உண்மையாக விரும்புகிறேன். மேலும், அதுகுறித்த எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. அந்த கதைக்கேற்ற வயது கொண்டவர்கள் யாராவது நடிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மேலும், இந்த வயதில் நானும் தியாவும் இந்தக் கதையில் நடித்தால் யானைக்கு கால்சட்டை அணிந்தது போல இருக்கும்”.

இவ்வாறு மாதவன் கூறியுள்ளார்.