தமிழ்நாடு போலீஸ் : நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். நெகிழ்ச்சியுடன் கூறும் மாதவன்…!

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அதில், “அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனாலும் அதே கருத்தை வலியுறுத்தி ரஜினிகாந்த, கமல்ஹாசன் என முக்கிய பிரபலங்கள் பலர் வீடியோ வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வீடியோவை பார்த்த நடிகர் மாதவன் அதை ட்விட்டரில் பதிவிட்டு வெளியில் சுற்றும் மக்கள் பற்றி கோபத்துடன் பேசியுள்ளார்.

“நம் முட்டாள் சகோதரர்களிடம் வீட்டிலேயே இருங்கள் என கெஞ்சுகிறார்கள். இப்படிப்பட்ட போலீஸ் மீது எனக்கு அதிக அன்பு, மரியாதை மற்றும் நன்றி உணர்வு அதிகம் வருகிறது. தமிழ்நாடு போலீஸ்.. நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். நெகிழ்ச்சியாகிவிட்டேன்” என கூறியுள்ளார் மாதவன்.