மாநிலங்களவை உறுப்பினராகும் மாதுரி தீட்சித் : பாஜக் திட்டம்

மும்பை

பாஜக வின் தேசிய தலைவர் நடிகை மாதுரி தீட்சித்தை சந்தித்து பேசி உள்ளார்.

பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த கதாநாயகிகளில் ஒருவரான மாதுரி தீட்சித்   கனவுக் கன்னியாக இருந்த ஸ்ரீதேவிக்கு போட்டியாக விளங்கியவர்.    அறிமுகமான புதிதில் அதிகம் பேசப்படாத மாதுரி தீட்சித், தேஜாப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பின் பெரும் புகழ் பெற்றார்.    அனைத்து பாலிவுட் நடிகர்களுடனும் நடித்த மாதுரி தீட்சித்   தற்போது திரையுலகை விட்டு விலகி  ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

பாஜக சம்பர்க் பார் சமர்தன் என்னும் இயக்கத்தை தொடங்கி உள்ளது.   பாஜக அரசின் சாதனைகளை விளக்க பிரபலங்களை சந்தித்து தலைவர்கள் இந்த இயக்கத்தின் மூலம் பேசி வருகின்றனர்.    தற்போது இடைத் தேர்தல்களில் பாஜக மிகவும் பின்னடைந்து வருவதால் பாஜக வின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னாள் கிரிக்கெட் தலைவர் கபில் தேவ் உட்பட பலரை சந்தித்து பேசி வருகிறார்ன்.

நேற்று மும்பையில் முன்னாள் பாலிவுட் கதாநாயகி மாதுரி தீட்சித் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.  அவருடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ், மற்றும் பாஜக மாநில தலைவர் ராவ்சாகிப் உடன் சென்றுள்ளனர்.    அதைத் தொடர்ந்து மாதுரி தீட்சித் விரைவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்படுவார் என்னும் செய்தி பரவி உள்ளது.

கார்ட்டூன் கேலரி