ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள் என்று ஒரு ஆடியோ பதிவை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார்.

விஷால்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தனக்காக முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்றும் அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் விஷால் கூறிவந்தார்.

இப்போது அந்த ஆடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் விஷால் வேலு என்பவருடன் பேசுகிறார். விஷால் : வேலு, நான் விஷால் பேசுறேன். வேலு : சொல்லுங்க சார்.. விஷால் : நீ கடிதம் கொடுத்து இருக்கியாமா.. கையெழுத்து உன்னுடையது இல்லன்னு.. வேலு : எங்க வீட்டு, லேடிஸ்கிட்ட மிரட்டி வாங்கி இருக்காங்க சார். விஷால் : யார் மிரட்டி வாங்கி இருக்காங்க.. வேலு : 3 மணிக்கு வந்து லேடிஸ் கூப்டு இருக்காங்க சார். லேடிஸ்ஸ கூப்டும்போதே அவங்க, எனக்கு போன் அடிச்சுட்டாங்க..

என் ஒய்ப்போட அக்கா எனக்கு போன் அடிச்சுட்டாங்க. விஷால் : யார், கூப்டாங்கமா..? வேலு : மதுசூதனன் டீம்.. விஷால் : மதுசூதனன் டீமா.. எதுக்கு கூப்டாங்கமா? வேலு : 10 பேர் சைன் போட்டு இருக்கீங்கள்ள. சைன் போட்டது நீங்க இல்லன்னு எழுதிக் கொடுங்கச் சொல்லி மனு எழுதி கொடுங்க…

உங்கள ரிஜக்ட் பண்றதுக்காக கூப்டு போயிருக்காங்க சார். விஷால் : சரி.. மிரட்டுனதுனால நீ கையெழுத்து போட்டு குடுத்துட்டியா? வேலு : சார் நான் இல்ல சார்.. லேடீஸ்ஸ கூப்ட்டு போகும்போது நான் இல்ல சார்.. என்ன ஒரு ரூம்ல உக்கார வச்சுட்டாங்க… விஷால் : எந்த ரூம்ல.. எனக்கு தெளிவா சொல்லு வேலு.. எங்க உக்கார வச்சுட்டாங்க..

வேலு : மதுசூதனன் ஆபிஸ்ல. அகஸ்த்ட் அப்பார்ட்மெண்ட்க்கு பின்னாடி இருக்குற ஆபிஸ்ல சார். நீ இங்க இருக்கணும்பான்னு சொல்லிட்டு.. எங்க வீட்டு லேடிஸ்ஸ இழுத்துட்டு போய்டு.. எல்லாம் எழுதி வாங்கிட்டு வீடியோலாம் எடுத்துக்கிட்டாங்க சார். விஷால் : யார் வீடியோ எடுத்தாங்க.. வேலு : ஆர்.ச்.ராஜேஷ் டீம் சார்.. எனக்கு பணம் கொடுத்தார் சார்.. விஷால் : எவ்ளோ பணம் கொடுத்தாங்க… வேலு : தெரியல சார்.. ஒரு 2,000 ரூபாய் கட்டு கொடுத்தாங்க.. விஷால் : அப்போ, நீ பணத்துக்கு விலை கொடுத்துட்டியா?

வேலு : இல்ல.. நான் இதுவரைக்கு 10 பைசா கூட வாங்கல…நான் உழைச்சு சம்பாதிச்சு தான் சாப்பிடுறேன். உங்க காசு வேண்டாம்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் எங்க வீட்டு லேடீஸ்ஸ மிரட்டி இழுத்துட்டு போய்ட்டாங்க சார்.. விஷால் : எங்க கூப்பிட்டு போனாங்க.. வேலு : தேர்தல் மனுத்தாக்கல் பன்னீங்கல்ல சார்.. ஷோனல் ஆபிஸ்க்கு கூட்டிட்டு போய்டாங்க.. இவங்க பேர்ல இருக்குறது போலி கையெழுத்துன்னு வாக்குமூலம் வாங்கிட்டாங்க சார். விஷால் : அவங்க இப்ப எங்க இருக்காங்க..

வேலு : அவங்க இப்ப வீட்ல இருக்காங்க சார்.. விஷால் : நான் அவங்கள மாதிரிலாம் மிரட்டமாட்டேன். அவங்கள ஒருவாட்டி வந்து, என்னோட கையெழுத்து இல்லன்னு என்ட்ட சொல்லச் சொல்லு. நான் போய்ட்றேன். அவங்களுக்குன்னு ஒரு மனசாட்சி இருக்குல்ல.. வேலு : ஓகே. சார்.. நா அவங்கள கூப்டு வாறேன் சார்.. – இவ்வாறு அந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ளது.

விஷாலுக்காக முன்மொழிந்தவர்களில் சுமதி என்பவரும் தீபன் என்பவரும், தங்களுடைய கையெழுத்து இல்லை என்று தெரிவித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள ஆடியோ பதிவில் விஷாலுடன் உரையாடும் வேலு, சுமதி என்பவரின் கணவர் என்று கூறப்படுகிறது.