ம.பி.யில் விநாயகர் சிலை கரைப்பின்போது விபரீதம்! தண்ணீரில் மூழ்கி 11 பேர் பலி

போபால்:

த்திய பிரதேச மாநிலத்தில், விநாயகர் சிலை கரைப்பின்போது படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தண்ணீரில் மூழ்கி 11 பேர் பலியாகினர். மேலும் 12 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த 2ந்தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விழாவுக்காக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடல் மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மத்தியபிதேச மாநிலம் போபாலில்6,  விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வான  கணேஷ் விசர்ஜனின் போது  போபால் அருகே உள்ள கட்லாபுரா எனும் ஆற்றில்விநாயகர் சிலைகளை கரைக்க படகு மூலம் ஆற்றுக்குள் எடுத்துச் சென்றனர்.

அப்போது திடீரென படகு கவிந்த நிலையில், அதில் இருந்தவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட னர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக மீட்பு குழுவினர் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.  இதில்,  நீரில் மூழ்கி உயிரிழந்த 11 பேர் உடல் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் மேலும் 12 பேரை காணவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை  நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.