‘பேஸ்புக்’ நிறுவனருக்கு போபால் நீதிமன்றம் சம்மன்

போபால்:

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வப்னில் ராய். இவர் ‘திடிரேபுட்’ என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். இது குறித்த விளம்பரத்தை பேஸ்புக் நிறுவனத்திற்கு வழங்கினார். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8 முதல் 14ம் தேதி வரை இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது.

2வது கட்டமாக இந்த விளம்பரம் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை வெளியிட வேண்டும். இந்த விளம்பரத்தை 16ம் தேதியுடன் வெளியிடுவதை பேஸ்புக் நிறுத்திவிட்டது. இதற்கு ‘திடிரேட் புக்’ என்ற தலைப்பு தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைப்பில் ‘புக்’ என்ற வார்த்தை வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்வப்னில் ராய் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பார்த் சங்கர் மிஸ்ரா பேஸ்புக் நிறுவனருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.