மாயமாகும் 2,000 ரூபாய் நோட்டுக்கள்…..சந்தேகம் கிளப்பும் பாஜக முதல்வர்

போபால்:

2,000 ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் இருந்து மாயமாவதற்கு பின்னால் சதி இருக்கிறது என்று மத்திய பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

சாஜ்பூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் மேலும் பேசுகையில், ‘‘பணமதிப்பிழப்புக்கு முன்பு 15 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்புக்கு பின்னர் இதன் மதிப்பு ரூ.16.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சந்தையில் காண முடியவில்லை.

இந்த ரூபாய் நோட்டுக்கள் எங்கே செல்கிறது?. அதை புழக்கத்தில் விடாமல் யார் வைத்திருப்பது?. பண பற்றாகுறையை ஏற்படுத்தும் நபர்கள் யார்?. பிரச்னை ஏற்படுத்த இதுபோன்று சதி செய்யப்படுகிறது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.