மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா…

போபால்:
த்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் முதல்வர் அலுவலக ஊழியர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இதுவரை 26,210 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 7553 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை  17,866 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் 791 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், மாநில முதல்வர் மற்றும்த அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு தொற்று உறுதி யாகி உள்ளது.
இதையடுத்து, தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், அமைச்சரவை சகாக்கள் உள்பட அனைவரும் கொரோனா சோதனை மேற்கொள்ளுங்கள் என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார்.