முதல் பணியாக விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்த மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு

போபால்

ட்சிக்கு வந்ததும் முதல் பணியாக விவசாயக்கடன்களை மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தள்ளுபடி செய்துள்ளார்.

 

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது முக்கியமானதாகும்.     தற்போது மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான கமல் நாத் முதல்வராக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.    அதை ஒட்டி அவர் நேற்று தனது முதல் பணியாக ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.    இந்த தள்ளுபடி மார்ச் 2018 வரை தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள கடன்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவசாயக்கடன் தள்ளுஅடியால் சுமார் 34 லட்சம் விவசாயிகள் பலனடைய உள்ளனர்.    மற்றும் இந்த கடன் தள்ளுபடியினால் அரசுக்கு ரூ.35000 முதல் ரூ.38000 வரை செலவாகும் என கூறப்படுகிறது.    இது குறித்து விவசாயத்துறை முழு விவரமும் அளிக்காததால் சரியான தொகை குறித்து கூற முடியவில்லை என அரசு தெரிவித்துள்ளது.

அரசின் இந்த விவசாயக்கடன் தள்ளுபடிக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.   இது குறித்த உத்தரவு விவசாயத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.   அவர்கள் கடன் தள்ளுபடிக்கான பணியை விரைவில் தொடங்க உள்ளனர்.