Random image

மத்திய பிரதேசம்: காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சமூக வலை தள தகுதி நீக்கம்

போபால்:

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சமூக வலை தள தகுதி நீக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் மத்தியப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் 15 ஆயிரம் ‘லைக்’, டுவிட்டரில் 5 ஆயிரம் பின் தொடருபவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

வாக்குச்சாவடிகள் மட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினரின் ‘வாட்ஸ்அப்’ குழுக்களுடன் இணைப்பில் இருக்க வேண்டும். காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் அனைத்து பதிவுகளையும் ‘லைக்’ மற்றும் ‘ரிடுவீட்’ செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் காங்கிரஸ் கட்சியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிபந்தனைகள் நீக்கப்பட்டதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.