ம.பி. சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி

த்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்துவரும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மத்தியப் பிரசேத்தில் கடந்த 2003-ஆம் வருடம் முதல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது முதலமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில் அங்கு சமீபத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.  மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கு  நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி அங்கு காங்கிரஸ்- மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக 29 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அம்மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜ.கட்சியே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் இந்தக் கருத்திற்கு மாறாக சில கருத்து கணிப்புகளும் வெளியாகின.

இந்த நிலையில் இருகட்சிகளுக்கும் இடையே கடும்போட்டி நிலவி வருகிறது.