போபால்:

த்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 விவசாயி கள் உயிரிழந்தனர்.

அந்த பகுதிக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூற சென்ற அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மாவட்ட எல்லையிலேயே கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற  மண்ட்சவுர் நகரில் விவசாயிகளை சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி செல்வதாக அறிவித்தார்.

அதையடுத்து,  அவர் துப்பாக்கி சூடு நடைபெற்ற  மண்ட்சவுர்  வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதையடுத்து, தடையை மீறி வருவதாக ராகுல் அறிவித்தார். இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து ராகுல் காந்தி தடையை மீறி அந்த பகுதி சென்றார். போலீசாரின் கெடுபிடி காரணமாக நீமூச் வரை வந்த ராகுல்காந்தி அங்கிருந்து இரு சக்கர வாகனம் மூலம் மண்ட்சவுர் பகுதிக்கு சென்றார்.

ஆனால் போலீசார் அவரை  மாவட்ட எல்லைக்குள்  நுழைய விடாதவாறு, எல்லையிலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.

குற்றவியல் நடைமுறை சட்டம் 151வது பிரிவின் கீழ் ராகுல் காந்தியை கைது செய்துள்ளதாக ம.பி போலீஸ் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ம.பி.யில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.