போபால்:

த்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு, அவர்களது கட்சியைச் சேர்ந்தவர்களாயே நெருக்கடி எழுந்துள்ள நிலையில், போர்க்கொடி தூக்கிய சிந்தியா ஆதரவு அமைச்சர்கள் 6 பேரும் மந்திரிசபையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

முதல்வரின் பரிந்துரையின்பேரில் மாநில கவர்னர் அவர்களை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்துவிட்டார். அவரது தீவிர ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 பேர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச ஆளுநரை லால்ஜி டாண்டனை முதல்வர் கமல்நாத் சிங், அவரிடம் மாநில அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார். மேலும், அவர் கொடுத்த புகார் மனுவில்,  ‘காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரை, பா.ஜ. கட்சி பெங்களூர் கொண்டு சென்று குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விடுவிப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். திங்கட்கிழமை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும்போது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயாராக உள்ளேன். எனக்கு எதிராக செயல்பட்ட 6 அமைச்சர்களை நீக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் கமல்நாத் செய்த பரிந்துரையின்படி ஜோதிராதித்யாவின் ஆதரவு அமைச்சர்களான இமாரதி தேவி, துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் சிசோடியா, பிரத்யும் சிங் தோமர், பிரதுராம் சவுத்திரி ஆகிய 6 பேரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி, ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்தார்.