போபால்

ஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி இந்தித் திரைப்படத்தை மத்திய பிரதேச அரசு தடை செய்தது.

இந்தித் திரைப்படம் பத்மாவதி பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. சித்தூர் ராணி பத்மினியின் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ராஜபுத்திர அரசியை அவமதிப்பதாக உள்ளதாக பல மாநிலங்களில் எதிர்ப்பு வந்துள்ளது.  சென்சார் போர்ட் தலைவர் பிரசூன் ஜோஷி இந்த திரைப்படத்துக்கு சான்றிதழ் வழங்கும் முன் சில தலைவர்களுக்கு காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.  அது மட்டுமின்றி சில ஆவணங்கள் இல்லை எனக் கூறி இந்த படத்துக்கு சான்றிதழ் கேட்டு கொடுத்த மனுவும் திருப்பி அளிக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜபுத்திரர்கள் இந்த படத்தை திரையிடக் கூடாது என அம்மாநில முதல்வருக்கு மனு அளித்திருந்தனர்.  இதையொட்டி மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த படத்தை மத்திய பிரதேச மாநிலத்தில் திரையிடக் கூடாது என தடை விதித்துள்ளார்.

இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.