காங்.முதல்வர் கமல்நாத்தின் அடுத்த அதிரடி: மத்தியபிரதேச காவலர்களுக்கு வார விடுமுறை

போபால்:

த்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ், அரியணை ஏறியதும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்த நிலை யில், தற்போது மாநிலத்தில் உள்ள காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.

ம.பி. முதல்வர் கமல்நாத்தின் அதிரடி நடவடிக்கைகள் மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை புறமுதுகிட்டு ஓடவிட்ட காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது. 2 மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன.

பாஜக கோட்டை என்று  மதவாதிகளால் அழைக்கப்பட்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

கடந்த 17ந்தேதி மத்திய பிரதேச முதல்வராக பதவி ஏற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், பதவியேற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், முதல் கட்டமாக விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து ராஜஸ்தான், சத்திஸ்கர்  மாநில காங்கிரஸ் அரசுகளும் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான பாஜக ஆளும் மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று மத்திய பிரதேச மாநில காவல்துறையினருக்கு வார விடுமுறை வழங்கும் கோப்பில் முதல்வர் கமல்நாத் கையெழுத்திட்டுள்ளார்.

காங்கிரஸ் முதல்வரின் அதிரடி நடவடிக்கை மத்திய பிரதேச மாநில பொதுமக்கள் மட்டுமின்றி, காவல்துறையினரிடமும் பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.