பாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…!

மத்தியப்பிரதேச சியோனி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு கணபதி விசர்ஜனின் போது பாம்பு பாடலின் இசைக்கு நடனமாடியபோது ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த நபர் மற்ற மூன்று நபர்களுடன் சகஜமாக நடனமாடுகிறார். அவர் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டு இருக்கையில், திடீரென்று அவர் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் கமல்நாத் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .4 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.