போபால் :
த்தியபிரதேச மாநிலத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா, அந்த கட்சியில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
அப்போது அவருடன், காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏ.க்கள், பதவியை ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க.வில் இணைந்தனர். அவர்களில் அனுப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பிஷாகுலால் சிங்கும் ஒருவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால், அவருக்கு வெகுமதியாக, அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

பிஷாகுலால் சிங், இப்போது உணவு அமைச்சராக உள்ளார். அனுப்பூர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் பள்ளிக்குழந்தைகளுக்கு நூறு ரூபாய் நோட்டுகள் வழங்கியுள்ளார்.
கையில் கத்தை கத்தையாக பணம் வைத்திருக்கும், அமைச்சர் சிங், ஒவ்வொரு மாணவிக்கும் நூறு ரூபாய் வழங்கும் வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் பரவி வைரலானாது.
இதையடுத்து அமைச்சர் சிங் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
-பா.பாரதி.