மத்திய பிரதேசம்:
த்திய பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றிவரும் ப்ரஜேந்திர சிங் யாதவ், அம்மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்திலுள்ள சுரேல் கிராமத்தில் கடந்த ஒரு வாரகாலமாக தங்கியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் செல்போனுக்கு சிக்னல் கிடைக்காததால் அங்கிருந்த 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பேசியுள்ளார், அமைச்சர் ஒருவர் 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தூலியாவைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் போதுமான மின்சாரம் இல்லை. இதனால் அங்கு தொலைக்காட்சி, செல்போன் போன்ற வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான கிராமங்கள் இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது இந்நிகழ்வின் மூலம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.