கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.வுடன் பழகிய 5 எம்.எல்.ஏ.க்கள் அலறல்..

கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.வுடன் பழகிய 5 எம்.எல்.ஏ.க்கள் அலறல்..

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பா.ஜ.க.மூத்த எம்.எல்.ஏ. ஒருவர் ஓட்டளித்து விட்டு, போபாலில் தனது மனைவியுடன் தங்கி இருந்தார்.

அன்று பிற்பகல் அவர் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், டாக்டர்களை அழைத்துள்ளனர்.

எம்.எல்.ஏ. தங்கி இருந்த இடத்துக்கு வந்த டாக்டர்கள் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மனைவியின் ரத்த மாதிரியைச் சோதனைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

சோதனையில் கணவன் –மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த தகவல் நேற்று பரவியதும், பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.வுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.வின் மண்டலத்தில் உள்ள 5 எம்.எல்.ஏ.க்கள், அவர்களின் கார் ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15 பேர் நேற்று போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

பரிசோதனை செய்துள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தேவிலால் என்பவர், இரு தினங்களுக்கு முன்னர் ,கொரோனா தொற்றுள்ள எம்.எல்.ஏ.வுடன் ஒன்றாக உணவு அருந்தியுள்ளார்.

மேலும் சில எம்.எல்.ஏ.க்கள், அந்த எம்.எல்.ஏ.வுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஓட்டளித்தபோது,தேர்தல் பணியில் இருந்த அலுவலர்கள் யார்?யார்? என சி.சி.டி.வி.காமிராவை வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்தியப்பிரதேச சட்டசபை வளாகத்தில்b நேற்று முன் தினம் நடந்த ஓட்டுப்பதிவில் கொரோனா பாதித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஒருவர் முழு உடல் பாதுகாப்பு கவசம் அணிந்து ஓட்டளித்தது குறிப்பிடத்தக்கது-

-பா.பாரதி