போபால்

ல்லெறிந்த போராளிகளை மறைத்து வைத்திருப்பதாக ம. பி. போலீசார், சந்தேகப்பட்டு ஒரு மூதாட்டியை அடித்து அவர் கை எலும்பை உடைத்தனர்.

போபாலில் இருந்து 25 கி மீ தூரத்தில் உள்ள ஃபாண்டாகாலா என்னும் இடத்தில் வசிப்பவர் எண்பது வயதான கமலாபாய் மேவாடே என்னும் மூதாட்டி..

இவர் தனது கணவர், மகன்கள், மற்றும் பேரன்களுடன் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று, அவர் வீட்டில் மிக அருகில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் சிலர் போலீஸ் மீது கற்களை வீசியதால் சில போலீசார் காயம் அடைந்தனர்.

கற்களை வீசி விட்டு தப்பி ஓடியவர்களை பிடிக்க போலிஸ் விரட்டியபடி, கமலாபாய் யின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அப்போது அவர் தன் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார்.

கல்லெறிந்த போராளிகளை மறைத்து வைத்திருப்பதாக மூதாட்டி மேல் போலீசார் குற்றம் சாட்டினர் .

அதை மறுத்த கமலாபாய், வீட்டில் எங்கும் சோதனை இடலாம் எனவும் சொல்லி இருக்கிறார்,

அதைக் காதில் வாங்காத போலிசார், கமலாபாய், மற்றும் அவர் கணவர் இருவரையும் சரமாரியாக தாக்கினர்.

மகன்கள், மற்றும் பேரன்களையும் போலீசார் விட்டு வைக்கவில்லை.

தானோ, தன் குடும்பத்தினரோ, இந்த போராட்டத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் இல்லை என அவர்கள் கதறியும் போலீசார் விடாமல் அடித்து நொறுக்கினார்கள்.

இந்த தாக்குதலில் கமலாபாய் அவரின் கை எலும்பு முறிந்தது.

கணவரின் காலில் அடிபட்டது.

அனைவரின் மேலும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

ம.பி. முதல்வர் உண்ணாவிரதம் இருந்த மைதானத்துக்கு கமலாபாய் தன் குடும்பத்துடன் சென்று போலிசாரின் அராஜகத்தை பற்றி புகார் கொடுக்கச் சென்றார்.

ஆனால் போலீசார் அவர்களை அனுமத்திக்கவில்லை.

இதற்கிடையில் போலீசார் கமலாபாயை அடிக்கும் புகைப்படம் ஒரு இந்தி தினசரியில் வெளியாகி வைரலாக பரவ ஆரம்பித்தது.

பத்திரிகையாளர்கள் ம. பி. போலீசாரை கேள்விக்கணைகளால் துளைக்கலாயினர்.

நிலைமை சீரியசாவதைக் கண்ட எஸ். பி, அரவிந்த் சாக்சேனா விரைவில் இந்த சம்பவத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.