போபால்:

த்திய பிரதேச மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 16ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,  சட்டமன்றக் கூட்டத்தொடரை 26ம் தேதிக்கு சபாநாயகர் நர்மதா பிரஜாபதி ஒத்திவைத்து  உத்தரவிட்டுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அவர்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்கள் இன்று மாலைக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் நர்மதா பிரஜாபதி கூறியிருந்தார்.

இதற்கிடையில் இன்று காலை மாநில கவர்னரை சந்தித்த முதல்வர் கமல்நாத் அடுத்த வாரம் சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் இதுவரை ஒருவர் கூட வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகத நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக 16ந்தேதி தொடங்க இருந்த  சட்டமன்றக் கூட்டத்தொடரை 26ம் தேதிக்கு சபாநாயகர் நர்மதா பிரஜாபதி ஒத்திவைத்து  உத்தரவிட்டுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது….

கொரோனா பீதியா…. சிந்தியா பீதியா என்பது முதல்வர் கமல்நாத்துக்கே வெளிச்சம்….