ரூ.2000 நோட்டில் காந்தி படம் இல்லை: அச்சுப் பிழை என வங்கி விளக்கம்

சொபூர்:
மத்திய பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ. 2000 நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


மத்திய பிரதேசம் மாநிலம், சொபூரில் உள்ள எஸ்பிஐ கி¬யில் விவசாயி ஒருவர் பணம் எடுத்துள்ளார். ஆனால் அவர் எடுத்த ரூ. 2000 நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இதுகுறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கிமேலாளர் ஆகாஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், “இது கள்ள நோட்டு கிடையாது. இந்த நோட்டில் அச்சுபிழை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.

கள்ள நோட்டுக்ளை ஒழிப்பதாக கூறி பணமதிப்பிறக்க அறிவிப்பை மோடி வெளியிட்டார். ஆனால், 2000 ரூபாய் நோட்டில் கள்ள நோட்டு அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. கடந்த மாதம் ஒடிசாவில் ரூ. 4.8 லட்சம் புதிய கள்ள நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று கான்பூரில் 7.64 லட்சத்துக்கு புதிய 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.