மின் கட்டணத்தைக் குறைத்து  வெளிச்சம் பாய்ச்சிய முதல்வர்..

கொரோனாவால் மக்கள் தாங்க இயலாத கொடுமையை அனுபவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை மின் வாரியம் கடுமையாக உயர்த்தி உள்ளதாகக் கூறி, மின் நுகர்வோர் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி, நியாயம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலமோ மின்சார கட்டணத்தைக் கணிசமாகக் குறைத்து, கொரோனா பாதிப்பில் இருண்டு கிடக்கும் மக்களுக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது..

ஏப்ரல் மாதம் 100 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தியவர்கள், மே,ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு தலா 50 ரூபாய் மட்டும் மின் கட்டணம் செலுத்தினால் போதும்.

நூறு ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கட்டணம் செலுத்தியோருக்கு ரூ. 100 மட்டுமே கட்டணம்.

400 ரூபாய்க்கு மேல் எவ்வளவு ரூபாய்க்கு பில் வந்தாலும் , பாதி கட்டணத்தைச் செலுத்தினால் போதும்.

இந்த இனிப்பான தகவலை மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று வெளியிட்டார்.

வீடியோ மூலம் 10க்கும் மேற்பட்ட சாமானிய பயனாளிகளுடன் உரையாடிய அவர், பின்னர், இந்த மின் கட்டண குறைப்பை அறிவித்தார்.,-

-பா. பாரதி