டெல்லி: மத்திய பிரதேசத்தில் ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. இவ்விரு மாநிலங்களில் 163 கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக பதிவாகி உள்ளது.

இந்தூரில் மட்டும் 244 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசம் 1299 கொரோனா நோயாளிகள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் 3வது மாநிலமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 13500 கொரோனா தொற்றுகள் உள்ளன. மகாராஷ்டிராவில் 286 புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஒரு நாளில் அறியப்பட்ட  அதிக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையாகும்.

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ எட்டி இருக்கிறது. அதில் 1000 பேர் கடந்த 4 நாட்களில் பாதிப்படைந்தவர்கள். டெல்லியில் 1640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட, அவர்களில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.