விஜய் படத்தில் மடோனா முக்கிய வேடம்.. தளபதி 65 அப்டேட்..

டிகர் விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ விஜய்யின் 64வது படமாக உருவாகி இருக்கிறது. கொரோனா லாக்டவுனால் இப்படம் வெளியாகமலிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை ஏஆர்.முருக தாஸ் இயக்குகிறார் என்று தகவல் வெளியானது. எஸ்.தமன் இப்படத்துக்கு இசை அமைக்கிறார்.


இதில் முக்கிய வேடமொன்றில் மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே காதலும் கடந்து போகும், கவன், ஜூங்கா, பா.பாண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய்யின் மாஸ்டர் மற்றும் தளபதி 65பட வெளியீடு மற்றும் தொடக்கம் பற்றிய அறிவிப்புகள் அவரது பிறந்த நாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed