கோவிட்-19 காற்றைச் சுவாசிக்கப் போகிறேன்: மடோனா

கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுமே உலகளவில் பெரும்பாலான பிரபலங்கள், நட்சத்திரங்கள், தங்களின் சமூக வலைதள பக்கங்கள் மூலம் தங்கள் ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர்.

இந்நிலையில் மடோனா, “நான் கோவிட் பரிசோதனை செய்துகொண்டேன். என் உடலில் ஆன்டி பாடீஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே நாளைக்கு நான் என் காரை எடுத்துக் கொண்டு நெடும் பயணம் செல்லப் போகிறேன். என் காரின் ஜன்னலை இறக்கி கோவிட்-19 இருக்கும் காற்றை சுவாசிக்கப் போகிறேன். சூரியன் பிரகாசமாக இருக்கிறது” என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

#staysafe #staysane

A post shared by Madonna (@madonna) on

அவரது இந்தப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.