தேங்காய் எண்ணெய் விளம்பரம் : காஜல் அகர்வால் மனு தள்ளுபடி

 

சென்னை

விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக நடிகை காஜல் அகர்வால் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை காஜல் அகர்வால்.   இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார்.   இவர் விவிடி தேங்காய் எண்ணெய் நிறுவன விளம்பரப்படத்தில் நடிக்க கடந்த 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தம் இட்டு அந்தப் படத்தில் நடித்துள்ளார்.   அந்த விளம்பரப் படம் தொடர்ந்து ஒளீபரப்பப் படுகிறது.

இது குறித்து நடிகை காஜல் அகர்வால், “விவிடி நிறுவன ஒப்பந்தப்படி நான் நடித்துள்ள விளம்பரத்தை ஒரு வருடம் மட்டுமே வெளிபரப்ப வேண்டும் ஆனால் அந்த நிறுவனம் அந்த விளம்பரத்தை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.  அதனால் எனக்கு அந்நிறுவனம் ரூ. 2.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என சென்னை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார்.

இதை விசாரித்த நீதிபதி. “ஒரு விளம்பரப்படத்தின் உரிமையானது காப்புரிமை சட்டப்படி அந்த நிறுவனத்துக்கு 60 ஆண்டுகள்  சொந்தமானதாகும்.   நடிகை காஜல் அகர்வால் அதில் நடிக்க சம்பளம் பெற்றுக் கொண்டதோடு அவருடைய பங்கு முடிந்து விட்டது.   அதனால் அவருக்கு இழப்பீடு தர தேவை இல்லை.” என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காஜல் அகர்வால் மேல் முறையீடு செய்தார்.   இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோரின் அமர்வில் நடந்தது.   நீதிபதிகள் முந்தைய தீர்ப்பு செல்லும் என தீர்ப்பளித்து காஜல் அகர்வால் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

You may have missed