சென்னை:
‘கொரோனில்’ என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க மருந்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றது. இந்தியாவிலும் இதற்கான ஆராய்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திலையில், பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்து கிட் ஒன்றை கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் ”கோரோனில் மற்றும் ஸ்வாசரி” (Coronil & Swasari). இதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று 7 நாட்களில் குணமடையும் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மருந்து கிட்டினை நோயாளிகள் மீது மருத்துவ ரீதியாக சோதனை செய்ததில் இது 100 சதவீத சாதகமான முடிவுகள் தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 30 நாட்களுக்கு பயன்படுத்தும் இந்த ஆயுர்வேத கிட்-ன் ரூபாய் 545 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனாவை குணப்படுத்தும் என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்ற கூறி சில மாநில அரசுகள் அதற்கு தடை விதித்தன.
இதையடுத்த ஆயுஷ் நிறுவனம் விளக்கம் அளித்தத. பதஞ்சலியின் கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை மட்டமே அதிகரிக்கும் கொரோனா நோயை குணப்படுத்தாது என்று விளக்கம் அளித்தது.

மேலும், மாநில உரிம ஆணையம், ஆயுர்வேத மற்றும் யுனானி சேவைகள், உத்தரகண்ட் அரசு வழங்கிய உற்பத்தி உரிமங்களின்படி பதஞ்சலி தனது திவா கொரோனில் டேப்லெட், திவ்யா ஸ்வாசரி வதி மற்றும் திவ்யா அனு தாலியா ஆகியவற்றை இந்தியா முழுவதும் தயாரித்து விநியோகிக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த அருத்ரா இன்ஜினியரிங் என்ற நிறுவனம், பதஞ்சலியின் கொரோனில் என்ற பெயருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவில்,  தொழில்துறை இயந்திரங்களை சுத்தம் செய்ய கொரோனில்- 213 எஸ்.பி.எல் & கொரோனில் – 92 பி என்ற பெயரில் ரசாயனங்களை தங்களது நிறுவனம் தயாரித்து வருவதாகவும், அதே பெயரில் பதஞ்சலி கொரோனா நோய் எதிர்ப்பு மருந்து தயாரித்துள்ளது. தங்களது தயாரிப்பின் பெயரை பதஞ்சலி நிறுவனம் உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, கொரோனில் பெயரை பதஞ்சலி பயன்படுத்த சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த தாக்கல் செய்த விதிமீறல் வழக்கைத் தொடர்ந்து பதஞ்சலி ஆயுர்வேத் டி வர்த்தக முத்திரை கொரோனிலைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.