சென்னை உயர்நீதி மன்றத்தில் 5லட்சம் வழக்குகள் தேக்கம்! தேசிய நீதித்துறை தகவல் அமைப்பு அதிர்ச்சி தகவல்

டில்லி:

நாட்டியிலேயே அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள உயர்நீதி மன்றம் சென்னை உயர்நீதி மன்றம் என்று கூறியதேசிய நீதித்துறை தகவல் அமைப்பு, சுமார் 5லட்சம் வழக்குகள் நிலுவை யில்  உள்ளதாக தெரிவித்து உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில்,  அதிகம் நிலுவை வழக்குகள் கொண்ட நீதிமன்றங்களின் பட்டியலில் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தற்போது முதலாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தேசிய நீதித்துறை தகவல் அமைப்பு (National judicial data grid) என்ற அமைப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் அதிகம் உள்ள வழக்குகள், மற்றும் விசாரிக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளின் எண்ணிக்கை 4,00,180 ஆக உள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 5லட்சத்துக்கு 12ஆயிரத்து 805 வழக்குகள் வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமானதை  விட 128.12 சதவிகிதம் அதிகம் என்று கூறி உள்ளது.

மேலும், பதிவேட்டில் நிலுவையில் உள்ள  வழக்குகளின் தேசிய சராசரி 19.03% மட்டுமே. பதிவேட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் மொத்த நிலுவையில் உள்ள வழக்குகளில் சேர்க்கப்பட்டால், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 9,12,985 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்றும் தெரிவித்து உள்ளது.

கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் 14 (0.06%) வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில்,  பம்பாய் உயர்நீதி மன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் இல்லை என்று தெரிவித்து உள்ளது.

மேலும், சென்னை உயர்நீதி மன்றத்தை தவிர மற்ற மாநில உயர் நீதிமன்றங்கள் வழக்குகளை கேட்டகிரி அடிப்படையில் பிரித்து வழக்குகளை விசாரணை நடத்துகிறது என்றும், இதன் காரணமாக 31 சதவிகிதத்தற்கு மேல் நிலுவையில் வழக்குகள் தேங்குவதில்லை என்றும் தெரிவித்துஉள்ளது.

தெலுங்கானா மாநில உயர்நீதி மன்றத்தில் 63,856 (30.54%) வழக்குகள் பதிவேட்டில் நிலுவையில் உள்ள நிலையில்  இரண்டாவது இடத்தில் உள்ளது உயர் நீதிமன்றத்தின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 2,09,084 ஆகும்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தைத் தவிர, நாட்டின் வேறு எந்த உயர் நீதிமன்றமும் 31% க்கும் அதிகமான வழக்குகளை ‘பதிவேட்டில் நிலுவையில் இல்லை என்றும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்குரிய வழக்குகள் மட்டும்  22,515 (5.63%) நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துஉள்ளது.

மேலும், மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் கடந்த ஓராண்டுக்குள் உள்ள நிலுவை வழக்குகள் 4.00.180 என்றும் இது 26.56 சதவிகிதம் என்று தெரிவித்து உள்ளது.

ஓராண்டுக்கு மேல்  3ஆண்டுகளுக்கு உள்ள நிலுவை வழக்குகள் 21.32  சதவிகிதம் என்றும், மூன்று முதல் 5ஆண்டுகளுக்குள் உள்ள வழக்குகள்  13.50 சதவிகிதம் என்றும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ள வழககுகள் 19.43 சதவிகிதம் என்றும் தெரிவித்து உள்ளது.

10ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் 15.80 சதவிகிதம் என்றும், 20ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை  உள்ள வழக்குகள் 2.38% சதவிகிதமும், 30 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வழக்குகள் 1.02 சதவிகிதம் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த வழக்கு பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ள நிலையில்,  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை நீதிமன்ற அதிகாரி, தேசிய நீதித்துறை தகவல் அமைப்பு கூறி உள்ள தகவல் தவறானது என்றும், அதற்கு  ‘தொழில்நுட்பப் பிழை’ காரணமாக இருக்கலாம் என்று மறுத்து உள்ளார்.

பழைய வழக்கு தகவல் அமைப்பிலிருந்து புதிய பதிப்பிற்கு இடம்பெயர்ந்ததால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழையாக இருக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

கடந்த அண்டு வெளியான  புள்ளி விவரத்தில் இந்திய அளவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் அதிக நிலுவை வழக்குகள் கொண்ட நீதிமன்றங்களின் வரிசையில் சென்னை உயர் 3 வது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது முதலிடத்தை பெற்று தமிழகத்திற்கு தலைகுனிவை  ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.