சென்னை :
போலி இ-மெயில் மூலம் மோசடி செய்ததாக, யுடியூப் சேனல் நிர்வாகி மாரிதாஸ்மீது, நியூஸ்18 ஊடகம் ஆசிரியர் குணசேகர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், சர்ச்சைக்குரிய வீடியோவை உடனே நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் தொடர்பாக, தனது யுடியூப் சேனலில், அரசியல் விமர்சகர்  மாரிதாஸ் கடுமையாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து, தனியார் தொலைக்காட்சி நிர்வாகம்,   மாரிதாஸ் மீது சென்னை நகர குற்றவியல் போலீசில்  புகார் மனு அளித்தது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில்  ரூ.1.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவதூறு வழக்கும் பதியப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  மக்களிடையே மத ரீதியான பிளவு ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்களை மிரட்டும் வகையிலும் மாரிதாஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நியூஸ் 18 குற்றச்சாட்டது.
இதையடுத்து,  யூடியூபர் மரிதாஸுக்கு நோட்டீஸ் அனுப்ப  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. அத்துடன்  சர்ச்சைக்குரிய யூடியூப் வீடியோவை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டது.
தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி குறித்து ஆதாரமற்ற செய்திகளை வெளியிட கூடாது என்று கூறிய நீதிபதி,   வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 12 ம் தேதிக்குள் பதிலளிக்க மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சைபர் கிரைம் வழக்கும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.