சென்னை

துரை ஆதின மடாதிபதி விவகாரத்தில் வரும் 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

புகழ் பெற்ற மதுரை ஆதினத்தின் 293ஆம் மடாதிபதியாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டதை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.     இந்த வழக்கில் நித்யானந்தா தரப்பில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் சீடர் கைப்பேசி பயன்படுத்தியதும் பெரும் பரபரப்பாகியது.    சீடர் வழக்கு விவகாரஙக்ளை வாட்சப் மூலம் நித்யானந்தாவுக்கு அனுப்பியது தெரிந்து அவர் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டது

இதை ஒட்டி உயர்நீதிமன்றம் நித்யானந்தாவின் சீடர் மீது கைப்பேசி பயன்படுத்தியதற்காக  விசாரணை நடத்த உத்தரவிட்டது.   மேலும் பிப்ரவரி இரண்டாம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் நித்யானந்தாவை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.