சென்னை,

ம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உள்பட 5 வழக்குகளை 3 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்பி தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, அரசுக்கு எதிராக செயல்படும் எம்எல்ஏக்கர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதுபோல தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்திலும் திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில், கவர்னர் மற்றும் சபாநாயகர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதால் சட்டச்சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வழக்குகளில் முடிவு எடுக்க முடியாமல் நீதிமன்றம் திணறி வருகிறது. இதையடுத்து இதுபோன்ற வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வுக்கு தனி நீதிபதி மாற்றி உள்ளார்.

எடப்பாடி அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக 18 பேர் சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு,

குட்கா விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை கேட்ட வழக்கு,

எடப்பாடி அரசின் பெரும்பான்மை நிரூபிக்கும் நிகழ்ச்சியின்போது, அரசுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவு அணியினர் ஓட்டுப்போட்டதால் அவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று திமுக கொறடா தொடரப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளை இதுவரை விசாரித்து வந்த தனி நீதிபதி ரவிச்சந்திரபாபு, 3 நீதிபதிகள் கொண்ட அரசியல் சான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இதன் காரணமாக இந்த வழக்கு மேலும் தாமதமாகும் சூழல் உருவாகி உள்ளது.