சென்னை: தனியார் நிறுவனம் மூலம் தமிழகஅரசு தொடங்கி வரும் அம்மா கிளினிக்குகளுக்கு செவிலியர்கள் நியமிக்கப்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.  கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த கிளினிக்கில்,  காய்ச்சல், தலைவலி உட்பட சிறிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக,  மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர்.

புதிதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தனியார் நிறுவனம் மூலம் செவிலியர் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வைரம் சந்தோஷ் என்பவர் தொடரப்பட்ட வழக்கில்,  அம்மா கிளினிக்குகளுக்கு செவிலியர்களை நியமிக்கும் முறை நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என்றும், தமிழக அரசு   டி.என். 5.12.2020 தேதியிட்ட GO Ms No. 530 மூலம் தமிழக அரசு, தனியார் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயல்முறையை அவுட்சோர்ஸ் செய்து வருகிறது,மேலும் இந்த செலக்ஷன் ரகசியமாக நடைபெற்று வருவதாகவும்  இது பிரிவு  14 மற்றும் 16 வது பிரிவை மீறுவதாகவும்  உள்ளது என்று  குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுமீதான  விசாரணை நீதிபதிகள் எம்எம்சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, அம்மா கிளினிக்குகளுக்கு செவிலியர்கள் நியமிக்கப்பட்டு வருவது விதிமீறிய செய்ல என்று தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.

அப்போது மாநில அரசின் கூடுதல் வழக்கறிஞர், இந்த வழக்கை ஒருநாள் ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை 5ந்தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தார்.