நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட சென்னை  உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை: நடிகர் சங்க கட்டிடம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் அஸ்திவாரம் அமைக்கும் பணிகளைத் தொடரலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்டப்படும் இடத்தில் 33 அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்தது. இது குறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் சென்னை காவல்துறையில் மனு கொடுத்திருந்தார்.

பிறகு  இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர். சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நடிகர் சங்கம் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே, நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.

 

கார்ட்டூன் கேலரி