அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மீதான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

மிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து பேசியதாக, அறப்போர் இயக்க நிர்வாகி  ஜெயராமன் வெங்கடேசன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அறப்போர் சமூக இயக்க ஒருங்கிணைப்பாளர்  ஜெயராமன் வெங்கடேசன். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, , மாநகராட்சி டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில்,  உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பிருப்பதாக கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், அறப்போர் ஜெயராமன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதற்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயராமன் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக இரு தரப்பினர் வாதங்களை கேட்ட நீதிமன்றம்,  இது தொடர்பாக 8 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், அதுவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயராமனுக்கு எதிராக நடைபெறும் அவதூறு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.