தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகளில் தேர்தல் நடத்த ரெடி: தலைமை தேர்தல் ஆணையர்

டில்லி:

மிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டால், 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 எம்எல்ஏக்களின் பதவி பறிப்பு செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும்,  18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்ற தடையையும் உயர்நீதிமன்றம் நீக்கியது.

இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டால், அங்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CEC OP Rawat on says ready to conduct by-election, Madras HC upholding disqualification of 18 rebel-AIADMK MLAs, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் ஐகோர்ட்டில் முறையீடு!
-=-