சென்னை,

கோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல்  பதவி உயர்வு பெற்று  உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.

அதையடுத்து, டில்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக பதவி வகித்த இந்திரா பானர்ஜியை, சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்/

அதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவி ஏற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தலைமைநீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் உயர்நீதி மன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கு பெற்றனர்.

இந்திரா பானர்ஜி, 1985ம் ஆண்டு, கொல்கத்தா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். 17 வருட வழக்கறிஞர் அனுபவத்துக்குப் பிறகு, 2002ம் ஆண்டு கொல்கத்தா நீதிமன்றத்தின் நீதிபதி யாக பதவியேற்றார்.

அதன்பிறகு, 2016 ஆகஸ்டு மாதம் முதல் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தற்போது உச்சநீதி மன்ற கொலீஜியத்தின் பரந்துரையின் பேரில் இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக காந்த கமாரி பட்நாகர்  (15 June 1992 – 1 July 1993) ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.

அதையடுத்து, சென்னை ஐகோர்ட்டின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாக  இந்திரா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார்.