சென்னை:

ழக்கு தொடர்பாக  நீதிமன்ற கட்டணம் செலுத்தும் முத்திரைத்தாள் கட்டணத்தை,  இ-ஸ்டாம்ப் முறையில் செலுத்தும் வகையில் புதிய திட்டத்தை சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போலி முத்திரைத்தாள்களை ஒழிக்கும் வகையில், இணையம் வாயிலாக  நீதிமன்ற கட்டனம் செலுத்தும் வகையில் எளிமையாக இ-ஸ்டாம்ப்  முறை சென்னையில் அறிமுகப்படுத்தப்பபட்டள்ளது.

தற்போது நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்ய நீதிமன்ற கட்டணம் முத்திரைத்தாள் மூலம் செலுத்தப்படுகிறது.,இதற்கு மாற்றாக, இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் நீதிமன்றக் கட்டணம் செலுத்தும் இ-ஸ்டாம்ப் எனப்படும் மின்னணு முத்திரைத்தாள் முறை சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் இ-ஸ்டாம்ப் முறையை இந்திரா பானர்ஜியும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இ-ஸ்டாம்ப் முறையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், வழக்கறிஞரகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பழைய முத்திரைத்தாள் முறையில் போலிகள் நடுமாடுவதை தடுக்கும் வகையில்,  இ-ஸ்டாம்ப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதன்  மூலம் நீதிமன்ற கட்டணம் செலுத்துவது எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த இ-ஸ்டாம் முறை  அடுத்த கட்டமாக மாவட்ட நீதிமன்றங்களில் செயல்படுத்தப்படும் என்றும்,  மின்னணு முத்திரைத்தாள் முறையால், போலி முத்திரைத்தாள்களை ஒழிக்க முடியும் என்றும் கூறினார்.