மதுரை:

ந்து தீவிரவாதம் குறித்து பேசிய  கமல்ஹாசன் மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவருக்கு  உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கியது.

கடந்த வாரம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என்றும், அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக உள்பட  இந்து மத அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும், அரவக்குறிச்சி  காவல் நிலையத்தில் கமல்மீது  மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

இந்த நிலையில்,  தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று  கடந்த வாரம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.அதைத்தொடர்ந்து கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.