தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு….தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து வரும் 6ம் தேதி விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கியது யார்? என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வரும் 6ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Madras High Court has ordered tamilnadu government to explain the circumstances that led to police firing into a crowd in Thoothukudi, தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தலைமை செயலகத்தில் பாரதிராஜா உள்ளிருப்பு போராட்டம்
-=-