மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக வெளியிட இருக்கும் ’குயின்’ வெப் சீரிஸ் மற்றும் ’தலைவி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி ஜெ. தீபாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் ஏ.எல்.விஜய் இயக்கும் படம் தலைவி. தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

Queesn என்ற வெப் சீரிஸை இயக்குநர் கெளதம்மேனனும் இயக்குகிறார். அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிக்கிறார்.

இதேப்போன்று பிரியதர்ஷினி இயக்கத்தில் The Iron lady என்ற பெயரில் நித்யாமேனன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின அண்ணன் மகளான ஜெ.தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை தவறாக சித்தரிக்கவில்லை என்கிற உத்தரவாதத்தை இயக்குனர்கள் தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் .

மூன்று இயக்குநர்களிடமும் ஜெயலலிதா கதையை குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் தற்போது ’குயின்’ வெப் சீரிஸ் மற்றும் ’தலைவி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி ஜெ. தீபாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.