எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு அன்புமணி வரவேற்பு

சென்னை:

சேலம் சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் கையகப்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. இந்த தடையை வரவேற்பதாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

சென்னை– சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைவதால்,  ‘விளை நிலங்கள், தோப்புகள் அழிக்கப்பட இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுபோல சாலை அமைப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அந்தப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இருந்தாலும் எதிர்ப்பை மீறி   நிலம் கையகப்படுத்தும்பணி நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் அந்த பகுதிகளுக்குள் செல்ல அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதி மன்றம்  தடை விதித்து உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தடை உத்தரவுக்கு பாமக இளைஞர் அணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். மேழம், 8 வழிச்சாலை நில எடுப்புக்குத் தடை விதிக்கப்பட்டடது குறித்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார்.