எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:

சேலம் சென்னை எக்ஸ்பிரஸ் சாலைக்கு நிலம் கையகப்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது.

சென்னை– சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைக்க, அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தும்பணி நடந்துவருகிறது. இந்த சாலை அமைவதால்,  ‘விளை நிலங்கள், தோப்புகள் அழிக்கப்பட இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.  இருந்தாலும் எதிர்ப்பை மீறி   நிலம் கையகப்படுத்தும்பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது,  வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம், நிலம் கையகப்படும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியது.

இந்த நிலையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையை தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த உயர்நீதி மன்றம், அந்த பகுதிகளில் மரத்தை வெட்டவும் தடை விதிப்பதாக கூறி உள்ளது. மேலும் நிலம் கையகப்படுத்து தொடர்பாக   அந்த பகுதி மக்களுக்கு காவல்துறையினர் கொடுக்கும் தொந்தரவு நிறுத்தப்படும் என்று நம்புவதாகவும்  தெரிவித்து உள்ளது.