Random image

உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்

டில்லி:

உச்சநீதிமன்ற நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் இந்திரா பானர்ஜி. இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

இதன் அடிப்படையில் அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.