உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

--

சென்னை:

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், தமிழக தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் அட்டவைணை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல்  அட்டவணையை ஆகஸ்ட் 6ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை ஆகஸ்டு 6ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு, வார்டு பிரிப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறி விசாரணையை இழுத்தடித்து வந்தது.

இதையடுத்து, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது.இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, இன்று தீர்ப்பு கூறப்படும் என எதிர்பார்த்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கடுமையாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது, 10 நிமிடத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யுங்கள் என்று கடுமையாக கூறிய நீதிபதிகள் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தை அடுத்து,  உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்டு  6ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அன்றைய தேதி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற  அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்றும், தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.